அதிகாரத்தைப் பயன்படுத்தி கொரோனா மருந்துகளைப் பதுக்கும் அரசியல்வாதிகள்: வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

அதிகாரத்தைப் பயன்படுத்தி கொரோனா மருந்துகளைப் பதுக்கும் அரசியல்வாதிகள்: வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

டெல்லி உயர்நீதிமன்றம்

நாட்டில் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் சிகிச்சைக்காகப் பயன்படும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை சில அரசியல்வாதிகள் பதுக்கி வைத்து விநியோகம் செய்வதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர்களைக் கண்டறிந்து வழக்குப் போடுங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 • Share this:
  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடக்கிறது. இங்குதான் அவரது ஆட்சிக்கு பல தரப்புகளிலிருந்தும் நெருக்கடி கொடுக்க கொரோனாவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் சில அரசியல்வாதிகள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லி தவித்து வரும் நிலையில் உ.பி., ஹரியாணா எல்லையில் ஆக்சிஜன் டிரக்குகளை நிறுத்தி வைத்து அனுப்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

  ஆக்சிஜனுக்காக வழக்கெல்லாம் தொடர வேண்டிய நிலைக்கு டெல்லி மாநில ஆட்சித் தள்ளப்பட்டது.

  ஆனாலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வாழ்வாதாரத்தை இழந்த ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு  நிதி உட்பட பல நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தலா ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

  இந்நிலையில் டெல்லியின் தீபக் சிங் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், சில அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, ரெம்டெசிவிர் மருந்துகளை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து வினியோகம் செய்கின்றனர். கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.மக்கள் மருந்துக்காக அல்லாடும் நேரத்தில், இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து மருந்துகள் கிடைக்கின்றன. இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ள சந்தையில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

  மருந்துகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து வினியோகிக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கும்படி, மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக வழக்கு பதிவு செய்யவும், டில்லி போலீசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒரு வாரத்திற்குள், நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி, போலீசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும், 17ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
  Published by:Muthukumar
  First published: