ஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் வேகம் எடுத்துள்ளது. உலகில் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ள 3வது நாடாக பிரேசில் உருவெடுத்துள்ளது.

ஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு
பிஜி தீவு (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 5, 2020, 11:37 PM IST
  • Share this:
ஐரோப்பா, அமெரிக்கா என கலங்கடித்த கொரோனா, தென் அமெரிக்கா நாடுகளை தனது வேட்டைக்களமாக்கி உள்ளது. தென் அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள பிரேசிலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1473 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசில் உயிரிழப்பு 34 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகளை சந்தித்த 3வது நாடாக மாறியுள்ளது.

உலகின் சின்னஞ்சிறு நாடான ஃபிஜி தீவு கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லாத நாடுகளில் ஒன்றான ஃபிஜி,  100 விழுக்காடு கொரோனாவில் இருந்து விடுதலை அடைந்து விட்டதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான துருக்கி, தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 15 மாநகரங்களில், வார இறுதி நாட்களில் ஊரடங்கை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனையை தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் தடை விதித்து துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.


பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 3 985 தொற்றுகள் புதிதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் பாதிப்பு 89 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தானில் சுமார் 20 ஆயிரம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்சில், கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தொற்று பரவல் முழுமையாக குறைந்துவிடவில்லை என்ற போதும், பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவியல் ஆலோசனை குழு கூறியுள்ளது. ஒன்றரை லட்சம் பாதிப்புகளையும், 29 ஆயிரம் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ள பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 44 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading