Home » News » Coronavirus-latest-news » FIFTY PERCENT DEATH RECORDED IN JULY AND CASES IN DISTRICTS EXCEPT CHENNAI KEEPS INCREASING 1 MG

ஜூலை மாதத்தில் மட்டும் 50% கொரோனா மரணங்கள்: கவலையளிக்கும் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள்..

தமிழகத்தில் இது வரை 2403 பேர் கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளனர். இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 1202 மரணங்கள், அதாவது 50% இறப்புகள், நிகழ்ந்துள்ளன.

ஜூலை மாதத்தில் மட்டும் 50% கொரோனா மரணங்கள்: கவலையளிக்கும் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள்..
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் இது வரை 2403 பேர் கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளனர். இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 1202 மரணங்கள், அதாவது 50% இறப்புகள், நிகழ்ந்துள்ளன.

ஜூன் மாதத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 40 முதல் 50 பேர மரணங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 90-ஐ தொடப்போகிறது. கடந்த மூன்று வாரங்களிலேயே இந்த மரணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா மரணங்கள் கடந்த இரண்டு நாட்களாக புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டு இருக்கின்றன. நேற்று 79 மரணங்களும் இன்று 88 மரணங்களும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதில் கவலையளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், சென்னை தவிர பிற மாவட்டங்களில் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மாதம் 18ம் தேதி வரை தமிழகத்தில் 625 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 501 மரணங்கள் , அதாவது 80% சென்னையில் பதிவாகியிருந்தது.

ஆனால் கடந்த ஒரு மாதத்தில் நிலைமைகளை மாறி, சென்னையில் 42% இறப்புகளும் பிற மாவட்டங்களில் 58% இறப்புகள் பதிவாகியுள்ளன.அரியலூர், தருமபுரி, கரூர், நீலகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதல் கொரோனா மரணம் கடந்த மூன்று வாரத்தில் தான் பதிவாகியுள்ளன. தற்போது கொரோனா மரணம் நிகழாத மாவட்டமே தமிழ்நாட்டில் இல்லை.

கடந்த மாத இறுதியில் 32 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்த மதுரையில் தற்போது 147 பதிவாகியுள்ளன. மாநிலத்தில் அதிக கொரோனா மரணங்கள் நிகழும் நான்காவது மாவட்டமாக உள்ளது.

சென்னைக்கு அருகில் இருக்க கூடிய செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ஜூலை மாதத்திலேயே 50% மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஜூன் மாத இறுதியில் செங்கல்பட்டில் 92 உயிரிழப்புகள் மற்றும் திருவள்ளூரில் 69 இறப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது செங்கல்பட்டில் 186 மரணங்கள், திருவள்ளூரில் 154 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் நான்கு, ஏழு, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 23, 11, 30 என உயர்ந்துள்ளது.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading