Home /News /coronavirus-latest-news /

தங்களுக்குத் தாங்களே நிவாரணம் கொடுத்து உதவிக் கொள்ளும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்!

தங்களுக்குத் தாங்களே நிவாரணம் கொடுத்து உதவிக் கொள்ளும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்!

உதவி செய்துக் கொள்ளும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்

உதவி செய்துக் கொள்ளும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்

எங்களுக்கு நாங்களே உதவி செய்வோம் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கும் வேலையின்றி தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்குத் தாங்களே நிவாரணம் கொடுத்து உதவி வருகின்றனர்.

சென்னை முழுக்க 200-க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து தங்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என்று கூறுகின்றனர். இதை அடுத்து ஏற்கனவே தங்கள் ஆட்டோவில் பயணம் செய்த வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

பலரும் அவர்களுக்கு பொருளாகவும் பணமாகவும் கொடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் மொத்தமாக சேகரித்து மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பத்தை தேர்வு செய்கின்றனர். அவர்களை தொடர்பு கொண்டு சென்னையில் ஏதாவது ஒரு பகுதிக்கு வரச்சொல்லி இரண்டு ஆட்டோக்களில் மளிகை பொருட்கள் பணம் ஆகியவற்றை எடுத்து வந்து கொடுக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகவே சென்று இவற்றை கொடுத்து வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ராஜி மற்றும் பரமேஸ்வரி ஆகிய இரண்டு பெண்மணிகள். எந்த அரசியல் கட்சிகளையும் நாங்கள் நாடவில்லை யாரும் எங்களைத் தேடி வரவில்லை என்கின்றனர். எனவே எங்களுக்கு நாங்களே உதவி செய்வோம் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Auto Driver, Chennai, CoronaVirus, Lockdown

அடுத்த செய்தி