புதிய வகை கொரோனா பரவலால் அச்சம்.. இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து ரத்து

புதிய வகை கொரோனா பரவலால் அச்சம்.. இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து ரத்து

மாதிரி படம்

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

 • Share this:
  இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பட்டனர். இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
  அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது. 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய கொரோன வைரசால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இங்கிலாந்துக்கு விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

  400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் பேரிணைவு இன்று நிகழும்..

  ஜெர்மனி, ருமேனியா, பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், ஃபிரான்ஸ் இங்கிலாந்துடனான கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி சவுதி அரேபியா, துருக்கி, இஸ்ரேல் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: