• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சரிந்த கச்சா எண்ணெய் விலை... இந்தியாவுக்கு ஆண்டுக்கு ₹ 10,700 கோடி மிச்சம்...! பெட்ரோல், டீசல் விலை குறையுமா...?

சரிந்த கச்சா எண்ணெய் விலை... இந்தியாவுக்கு ஆண்டுக்கு ₹ 10,700 கோடி மிச்சம்...! பெட்ரோல், டீசல் விலை குறையுமா...?

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

"நம் தேவைக்கான கச்சா எண்ணெய்யில், சுமார் 83 சதவிதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம்"

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரஷ்யா, சவுதி இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால், கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது.

    கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது. ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் விலை தொடர்பான போர் ஒன்றை சவுதி அரசு முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனா உட்பட சர்வதேச நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன.

    இதன் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியும் சீனாவில் குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கச்சா எண்ணெய்யின் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஒபெக் நாடுகள் அமைப்பு ரஷ்யாவிடம் கூறியது. இதற்கு ரஷ்யா மறுத்துள்ளதால், சவுதி அரசு, தான் விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்யின் விலையை குறைத்துள்ளது.

    இதன் காரணமாக சர்வதேச அளவில் 1991-ம் ஆண்டு வளைகுடா போரின் போது ஏற்பட்ட சரிவிற்கு பிறகு எப்போதும் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 44.80 டாலராக இருந்த நிலையில், தற்போது 14.25 டாலர், அதாவது 31.5 சதவிதம் குறைந்து 31.02 டாலராக உள்ளது. அதே போல், WEST TEXAS INTERMIDIATE கச்சா எண்ணெய்யின் விலை 37 டாலராக இருந்த நிலையில், தற்போது 10.59 டாலர், அதாவது 33 சதவிதம் குறைந்து 27.59 டாலராக உள்ளது. இதற்கு முன்பு மிகக்குறைந்த விலையாக, 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 35.75 டாலருக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது.

    நம் தேவைக்கான கச்சா எண்ணெய்யில், சுமார் 83 சதவிதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். சவுதி அரேபியாவில் இருந்து ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.

    பொதுவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால், இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரத்து 700 கோடி செலவு குறையும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 10 டாலர் குறைந்தால், பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 6 ரூபாய் வரை குறைய வாய்ப்புகள் உள்ளன. கச்சா எண்ணெய் விலை இனி வரும் காலங்களிலும் குறையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

    தற்போது, மிக குறுகிய காலத்தில், சுமார் 14 டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    கச்சா எண்ணெய் விலை சரிவை கண்டாலும், தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என பொருளாதார ஆலோசகர் ஷ்யாம் சேகர் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் இதன் மூலம் மேம்பாடு அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: