Fact Check : மக்களை வெளியே வரவிடாமல் தடுக்க சிங்கங்களை சாலையில் விட்டதா ரஷ்யா?

Fact Check : மக்களை வெளியே வரவிடாமல் தடுக்க சிங்கங்களை சாலையில் விட்டதா ரஷ்யா?
வீதியில் சிங்கம் - வைரலாகும் புகைப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த மக்கள் வெளியே வரமால் இருக்க ரஷ்ய அரசு வீதிகளில் சிங்கங்களை விட்டதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டும் உள்ளது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு, மக்கள் வெளியே செல்ல தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த மக்கள் வெளியே வராமல் இருக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிங்கத்தை வீதியில் விட உத்தரவிட்டதாக இணையத்தில் செய்தி வெளியானது. வீதியில் சுற்றும் சிங்கம் புகைப்படம் வெளியாகி அனைவரிடம் பீதியை கிளப்பிய நிலையில் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.



ஆனால் அந்த செய்தி முற்றிலும் தவறான ஒன்று. அந்த புகைப்படத்திற்கும் செய்திக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. அந்த புகைப்படம் கடந்த 2016, ஏப்ரல் 15ம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பார்க் வீதியல் எடுக்கப்பட்டது. திரைப்பட ஷீட்டிங்கற்காக அந்த சிங்கம் பயன்படுத்தப்பட்டதாக டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொடர்பான எந்த ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமல் நம்பவும் வேண்டாம், பகிரவும் வேண்டாம். கொரோனா குறித்து வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்டும் என்று காவல்துறையினர் எச்சரித்தும் உள்ளனர்.
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்