தொடர்ந்து முகக் கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்னைகள் - சரி செய்வது எப்படி?

நாள் முழுவதும் முகக் கவசம் அணிந்திருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதில்லை என்பதால், அவர்களுக்கு நீர்சத்து குறையும் ஆபத்து உள்ளது. 

தொடர்ந்து முகக் கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்னைகள் - சரி செய்வது எப்படி?
முககவசம்
  • News18
  • Last Updated: October 10, 2020, 1:20 PM IST
  • Share this:
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, அலுவலகம், மருத்துவமனை என பணியிடங்களுக்கு செல்வோரும், பிற தேவைகளுக்காக அடிக்கடி வெளியில் செல்பவர்களும் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டியுள்ளது. முகக் கவசம் அணிந்திருக்கும் நேரத்தில் அதை கழற்றி அவ்வப்போது நீர் குடித்து மீண்டும் அதே முகக் கவசத்தை அணிந்து கொள்வது பாதுகாப்பானது இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் உடலில் தண்ணீர் அளவு குறையாமலும் இருக்க வேண்டும் என்பதால், சாதாரண குடிநீருக்குப் பதிலாக உப்பு கலந்த நீரைக் குடிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், மதிய உணவருந்தும் வேளையில் அதிக அளவில் நீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

போதிய தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடல் சோர்வு, காய்ச்சல் வரும் ஆபத்து இருப்பதாக கூறும் மருத்துவர்கள், பெருந்தொற்று காலத்தில் காய்ச்சல் வந்தால், எதனால் வந்தது என்ற தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர். அதேபோல், தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீர் அளவு குறைவதோடு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே முகக்கவசம் அணிந்து இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டாம் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், நாள்தோறும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் மட்டுமே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர்.
First published: October 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading