கொரோனா நிவாரண நிதி ரூ.4000... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

மாதிரி படம்

கொரோனா நிவாரண நிதி முதல் தவணையை 98.4 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

 • Share this:
  கொரோனா நிவாரண நிதியாக மே மாதத்தில் வழங்கப்பட்ட முதல் தவணை ரூ.2000 பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரூ.4000 நிவாரண நிதியாக வழங்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான முதல் தவணை ரூ.2000 மே மாதம் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டது.

  கொரோனா நிவாரண நிதி முதல் தவணையை 98.4 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே இரண்டாம் தவணை ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள போதும் ரேஷன் கடைகளில் நிவாரண நிதி முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தவணையை பெற தவறியவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்ததப்பட்டவர்கள் நிவாரண நிதி பெற தவறியதால் அதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: