ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம்

கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட உயர்மட்ட பொருளாதார மேம்பாட்டுக்குழு தனது அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம்
ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த மே மாதம் 9-ம் தேதி அமைத்தது.

இந்த குழுவில் பல்துறை வல்லுநர்கள் பொருளாதார நிபுணர்கள் என 14 பேரும் மாநில அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த செயலாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.

அந்த குழு ஆய்வுக்கூட்டத்தை நடத்தி துறை ரீதியாக ஆய்வு நடத்த துணைக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டது. துணைக்குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க...தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

இருப்பினும் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 8-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading