மோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி வரிசெலுத்த அவகாசம் நீட்டிப்பு..
மோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி காலாண்டு வரி செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
- News18 Tamil
- Last Updated: August 14, 2020, 11:28 AM IST
கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களின் போக்குவரத்து முடங்கி உள்ளது. பேருந்து சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் வாகன உரிமையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில், தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி காலாண்டு வரி செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், பிற மாநிலங்களுக்கும் வாகனங்கள் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை இம்மாதம் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க...கோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..
மேலும் லாரிகள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு காலாண்டு வரியை அபராதமின்றி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன உரிமையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில், தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கு அபராதமின்றி காலாண்டு வரி செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், பிற மாநிலங்களுக்கும் வாகனங்கள் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை இம்மாதம் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லாரிகள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு காலாண்டு வரியை அபராதமின்றி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.