Home /News /coronavirus-latest-news /

Omicron | மற்ற வேரியன்ட்களை விட ஓமைக்ரான் கடுமையானதா? தற்போதைய தடுப்பூசிகள் பலனளிக்குமா?- Explainer

Omicron | மற்ற வேரியன்ட்களை விட ஓமைக்ரான் கடுமையானதா? தற்போதைய தடுப்பூசிகள் பலனளிக்குமா?- Explainer

முந்தைய வேரியன்ட்களை காட்டிலும் இந்த புதிய வகை தொற்று 500% அதிகமாக இருக்கலாம். இருப்பினும், இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் லேசானவையாகவே இருக்கின்றன என்று என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முந்தைய வேரியன்ட்களை காட்டிலும் இந்த புதிய வகை தொற்று 500% அதிகமாக இருக்கலாம். இருப்பினும், இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் லேசானவையாகவே இருக்கின்றன என்று என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முந்தைய வேரியன்ட்களை காட்டிலும் இந்த புதிய வகை தொற்று 500% அதிகமாக இருக்கலாம். இருப்பினும், இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் லேசானவையாகவே இருக்கின்றன என்று என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீவிரமான வைரஸாக குறிப்பிடப்படும் ஓமைக்ரான் வைரஸ் வேரியன்ட் இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தை நேரில் பார்த்த பிறகு டெல்டா வேரியன்ட் மக்களை மிரட்டி வந்த நிலையில் தற்போது புதிதாக இந்தியாவில் காலடி வைத்துள்ளது  ஓமைக்ரான்.

இந்தியாவில் நுழைந்திருக்கும் ஓமைக்ரான் பற்றி பேசிய WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய அதிகாரி டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வருவோரை எச்சரிக்கையாக கண்காணித்து, ஒருவேளை அவர்களுக்கு ஓமைக்ரான் இருந்தால் அதை விரைவாகக் கண்டறிந்து வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓமைக்ரான் உட்பட கொரோனாவின் அனைத்து வேரியன்ட்களுமே SARs CoV2-க்கு சமம். எனவே இதுவரை பின்பற்றி வந்தது போலவே பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்களின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்துகிறார் பூனம் கேத்ரபால் சிங்.

COVID-ன் ஓமைக்ரான் மிக கடுமையானதா?

ஓமைக்ரான் வேரியன்ட் முந்தைய பல வேரியன்ட்களில் இருந்து வேறுபட்டு, தன்னுடைய ஸ்பைக் புரதத்தில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை (mutations) கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி உடலுக்குள் நுழையும் தன்மை மற்றும் அதிக பரவும் விகிதம் உள்ளிட்டவற்றை கொண்டதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முந்தைய வேரியன்ட்களை காட்டிலும் இந்த புதிய வகை தொற்று 500% அதிகமாக இருக்கலாம். இருப்பினும், இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் லேசானவையாகவே இருக்கின்றன என்று என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

டெல்டாவுடன் ஒப்பிடும் போது

இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு வழிவகுத்த டெல்டா வேரியன்ட்டுடன் ஒப்பிடும் போது, ஓமைக்ரான் ஸ்பைக் புரதத்தில் அதிக பிறழ்வுகளை கொண்டுள்ளது. இது சற்று அதிகமாக உருவாகி மேலும் பரவக் கூடியதாக இருக்கும். இதுவரை ஓமைக்ரானால் இறப்பு நிகழ்வுகள் எதுவும் இல்லை என்றாலும், டெல்டாவை விட கடுமையானதா என்பது பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. எனினும் ஓமைக்ரானால் அடுத்த கோவிட் அலை ஏற்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என்று WHO எச்சரித்துள்ளது.

பரிசோதனைகள்:

அனைத்து புதிய வேரியன்ட்களுக்கும் பரிசோதனை நடைமுறைகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்றாலும் தற்போது இருக்கும் சோதனைகள் வைரஸை கண்டறிவதில் இன்னும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய தடுப்பூசிகள் பலனளிக்குமா?

ஓமைக்ரான் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டிருப்பதால், தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் 100% நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவில்லை என்றாலும், கொரோனா வைரஸின் பிறழ்வுகளுக்கு பிறகும், தற்போதுள்ள தடுப்பூசிகள் குறைந்தபட்சம் நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைப்பதில் வேலை செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

ஓமைக்ரான் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக இருப்பதை போல தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்ட கூடாது என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். தொற்று தீவிரமாக இருந்த போது பின்பற்றிய பல முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் கவனமாக பின்பற்ற வேண்டும், குறிப்பாக முழுமையாக தடுப்பூசி போட்டு கொள்வது சிறந்தது, தடுப்பூசி போட்டு கொண்டாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

புதிய கட்டுப்பாடுகள் தடுக்க உதவுமா?

தற்போது வரை ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ள நிலையில், திருத்தப்பட்டுள்ள சர்வதேச பயண வழிகாட்டுதல்கள், பயணிகள் வருகைக்குப் பிந்தைய RT-PCR டெஸ்ட் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதாக மற்றும் அதை தனிமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே இது அதிக சேதத்தை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது. எப்போதுமே கட்டுப்பாடுகள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் திடீரென வெளிப்படுவதையும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பு வீழ்ச்சியடைவதையும் தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் நிபுணர்கள்.
Published by:Archana R
First published:

Tags: CoronaVirus, Explainer, Omicron

அடுத்த செய்தி