முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா தடுப்பூசி கருவுறுதலை பாதிக்குமா? அறிவியல் கூறும் உண்மை! - Explainer

கொரோனா தடுப்பூசி கருவுறுதலை பாதிக்குமா? அறிவியல் கூறும் உண்மை! - Explainer

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பாட்டு மிகவும் மோசமான உடல்நலக் கோளாறில் இருக்கும் நோயாளிகள் ஆறில் ஒருவர் தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிகள் என்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பாட்டு மிகவும் மோசமான உடல்நலக் கோளாறில் இருக்கும் நோயாளிகள் ஆறில் ஒருவர் தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிகள் என்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பாட்டு மிகவும் மோசமான உடல்நலக் கோளாறில் இருக்கும் நோயாளிகள் ஆறில் ஒருவர் தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிகள் என்பது தெரியவந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

சில பெண்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் ஈடுபாடின்றி உள்ளனர் என்பது நம்மில் பலர் அறிந்தது. ஏனெனில், தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களின் கரு அல்லது கருவுறுதலை பாதிக்கும் என்ற கவலையின் காரணமாக தயங்குவதாக தெரிவிக்கின்றனர்.

சில வதந்திகள் பெண்களின் அச்சங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் இப்போது அல்லது எதிர்காலத்தில் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பை பாதிக்கலாம் அல்லது கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பெண்களை தவறாக வழிநடத்துவதாக தெரிகிறது.

ஆனால், இந்த கூற்றுகளை ஆதரிக்க எந்த ஆராய்ச்சி ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. கோவிட் தடுப்பூசிகள் கருவுறுதலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, கருச்சிதைவுக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தாது, கர்ப்பமாக இருக்கும்போது தடுப்பூசிகள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

இருப்பினும், கொரோனா தொற்றானது கர்ப்பிணிப் பெண்களுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தும். தற்போது, இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பாட்டு மிகவும் மோசமான உடல்நலக் கோளாறில் இருக்கும் நோயாளிகள் ஆறில் ஒருவர் தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிகள் என்பது தெரியவந்துள்ளது.

Must Read | மொபைல்… குழந்தைகள்… பெற்றோர்களுக்கு மருத்துவ உலகம் விடுக்கும் எச்சரிக்கை! 

தடுப்பூசி போட்ட பிறகு பல பெண்களின் நிலை குறித்து ஆராயப்பட்டது. அதில், கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற பெண்களுக்கு, தடுப்பூசி போடப்படாத பெண்களுடன் ஒப்பிடும்போது கருப்பை நுண்ணறை (முட்டை) தரத்தில் எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போடப்படாத பெண்களுடன் ஒப்பிடும்போது, ​​விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்) செய்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி பெற்ற பெண்களுக்கு கரு உள்வைப்பு விகிதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஆண்களின் கருவுறுதலில் கொரோனா தடுப்பூசியின் விளைவையும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கொரோனா தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஒப்பிடும் போது இவை விந்தணு அளவு, செறிவு, இயக்கம் (சரியான வழியில் நீந்தும் திறன்) மற்றும் மொத்த இயக்க விந்து எண்ணிக்கை ஆகியவற்றில் எந்த மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று நிரூபித்துள்ளது.

First published:

Tags: Covid-19, Covid-19 vaccine, Explainer, Pregnancy