• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • டெல்லியில் ஜூலை-க்குள் கொரோனா பாதிப்பு 5.5 லட்சமாக உயரும்: மணீஷ் சிசோடியா

டெல்லியில் ஜூலை-க்குள் கொரோனா பாதிப்பு 5.5 லட்சமாக உயரும்: மணீஷ் சிசோடியா

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜூலை மாத இறுதியில் 5.5. லட்சமாக உயரும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறி உள்ளார்.

  • Share this:
    ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் கொரோனா பாதிப்பு ஐந்தரை லட்சமாக அதிகரிக்கும் என அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் துணைநிலை ஆளுநருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது டெல்லியில் இதுவரை சமூகப்பரவல் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக விளக்கம் அளித்தார். கொரோனா இரட்டிப்பு விகிதம் கடந்த 12 நாட்களாக இருப்பதாக கூறிய மணீஷ் சிசோடியா, ஜூன் 30ஆம் தேதி வரை 15,000 படுக்கைகளும், ஜூலை 31 வரை 80,000 படுக்கைகளும் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

    டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...

    அறிகுறியே இல்லாதவர்களிடம் இருந்து கொரோனா பரவுமா? WHO விளக்கம்

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: