'நானே  எடுத்துக்காட்டு...' கொரோனாவில் இருந்து மீண்ட பெண் மருத்துவர் உருக்கம்

புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து மீண்ட பெண் மருத்துவர் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'நானே  எடுத்துக்காட்டு...' கொரோனாவில் இருந்து மீண்ட பெண் மருத்துவர் உருக்கம்
கொரோனாவில் இருந்து மீண்ட பெண் மருத்துவர் உருக்கம்
  • Share this:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மருத்துவரானார், ஜிப்மர் மருத்துவமனையில் இளம் மருத்துவரான மிதுனா. ஜிப்மர் கோவிட் சிகிச்சை பிரிவில் பணியாற்றியபோது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.  நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் தனது பணியை அதே  சிகிச்சை பிரிவில் துவக்கியுள்ளார்.

தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள மிதுனா, தனக்கு தொற்று இருக்காது  என்ற நம்பிக்கையில் இருந்த போது, அலைபேசியில்  பேசியவர் தொற்று இருப்பதை உறுதி செய்தார். இதனால்  பயமும்  உதவியற்றத்தன்மை கொண்ட உணர்வும் ஏற்பட்டது என்கிறார். தன் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக மாறியது மே 30-ம் தேதி. அன்றுதான் தனக்கு பரிசோதனை செய்யப்பட்டு கோவிட் நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர் குழுவில் ஒருவராக இருந்த தனது கடமை அன்று முதல் தடைப்பட்டதாக கவலையுடன் தெரிவிக்கும் மிதுனா, தன்னுடன் தங்கியிருந்த தோழியிருக்கு  தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று உணர்வு அச்சத்தை கூட்டியது.


மிதுனா


பெற்றோரிடம் தகவலை பகிர்வதை தடுத்தேன்.நான் குணமடைய பலரும் வேண்டிய போது இந்த நோய் தொற்றை எதிர்த்து நான் தனியாக போராட்டவில்லை என்பதை  உணர்ந்தேன்..
உங்களுக்கு தெரிந்த யாருக்காவது தொற்று ஏற்பட்டால், தயவுசெய்து உங்களுக்கு இது எப்படி தொற்றியது?, உன்னால் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது? போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என்று மிதுனா கேட்டு கொள்கிறார்.அதற்கு பதிலாக ஆதரவாக பேசி, அவர்களுக்கு விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுக்கலாம் என்கிறார். மருத்துவ துறையினரை ஆதரிக்க கைதட்டுவதும் அல்லது விளக்கேற்றுவதும் மட்டும் போதாது. உங்களுக்கு அருகிலுள்ள ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும்போது அவரது நிலையறிந்து ஒற்றுமையைக் காட்டுவதே உண்மையான ஆதரவாகும். எனக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டபோது, எனது வீட்டிற்கு அருகாமையில் இருந்த சிலர் பிரச்சனை செய்துள்ளனர்.

ஆனால், அந்த நபர்கள் தான் சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களை கைதட்டியும், விளக்கு ஏற்றியும் பாராட்டுவதாக கூறினர்," என்று தனது வருத்தத்தையும்  மருத்துவர் மிதுனா பதிவிட்டிருக்கிறார். மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்ற தொடங்கியதாக கூறும்  சிலர் தன்னை அச்சத்துடன் கண்டு விலகியதாக கூறும் மிதுனா, ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் 'ஹாய்' சொல்வதை நிறுத்துவது எனக்கு தெரிந்தது.ஒரு சிலர் பயத்துடன் விலகிச் செல்வதை  உணர்ந்தேன். நான் நலமாக இருக்க பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பலரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது "நானே எனக்கு எடுத்துகாட்டு" எனமனதிற்கு அமைதி ஏற்படுகிறது என மிதுனா கூறுவது கொரோனா நோயாளிகளுக்கு மிகப்பெரிய மருந்து.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading