விடைத்தாள் திருத்தும் தேதியில் மாற்றம் - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா?

விடைத்தாள் திருத்தும் தேதியில் மாற்றம் - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா?
கோப்புப் படம்
  • Share this:
மார்ச் 31-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 7-ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதனால் திட்டமிட்டப்படி  ஏப்ரல் 24-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுமா  என்கிற கேள்வி எழுந்துள்ளது. கொரோனோ நோய் பரவலை தடுக்கும் வகையில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இதனால் 26-ம் தேதி நடைபெற இருந்த  11-ம்  வகுப்பிற்கான கடைசி தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15-க்கு பின் துவங்கும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இம்மாதம் 31-ம் தேதிக்கு பதில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 11-ம் வகுப்பு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகாது.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்ப்பட்டால் மருத்துவம் ,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading