நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரேனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி அடுத்து 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு போடப்பட்டது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில், தடுப்பூசி கிடங்கை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியளார்களை சந்தித்த அவர், கோவிட் நேரத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சுகாதாரத்துறை யிடம் கேட்டுக் கொண்டது. அற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியும் சுத்தம் செய்து, சானிடைசர் வைக்கப்படும். வாக்களிப்பவர்களுக்கு கையுறை, கொரோனா நோயாளிகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்டும். வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்தார்.
தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போடுபவர்கள் தொடர்ந்து போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம், வந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.