தாய் இறந்த செய்தியை கேட்ட பிறகும் கடமையை தொடர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்... உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்

தாயின் இறப்பு செய்தியை கேட்ட பின்னரும் கொரோனா நோயாளிகளுக்காக தனது கடமையை தொடர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் இறப்பு செய்தியை கேட்ட பின்னரும் கொரோனா நோயாளிகளுக்காக தனது கடமையை தொடர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
உத்தர பிரதேச மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராக பணி செய்துவரும் பிரபாத் யாதவ் என்பவர் தனது தாயின் இறப்பு செய்தியை கேட்ட பின்னரும் கொரோனா நோயாளிகளுக்காக தனது கடமையை தொடர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா எனும் பேரலையினால் பலர் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் மருத்துவத்துறைக்கு பெரும் சவாலான இந்த காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காத்து வருகின்றனர். அந்த வகையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான பிரபாத் யாதவ், கொரோனா நோயாளிகளை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே இவரது வழக்கமான பணி. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பணி கொரோனா காலகட்டத்தில் கூடுதல் முக்கிய, பொறுப்பு மிகுந்த உயிர்காக்கும் பணிகளுள் ஒன்றாகும்.

உ.பி. மதுராவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாத் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, குடும்பத்தினரிடம் இருந்து அவரது அலைபேசிக்கு அழைப்பு வந்ததுள்ளது. அதில், அவரது தாயார் இறந்துவிட்டதாக அதிர்ச்சிக்குரிய தகவலை கூறியுள்ளனர்.

Also Read : தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

இருப்பினும், கடமை தவறாத பிரபாத் தனது பணியை முடிக்க உறுதிபூண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தன்னுடைய அன்றைய பணியை முடித்திருக்கிறார்.

ambulance driver who helped covid patients

படம்: பிரதாப் யாதவ்

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு பேட்டியளித்த பிரபாத், ‘என் தாயாரின் இறப்பு செய்தியை கேட்டு நான் அதிர்ந்தேன். ஆனால், நாங்கள் செய்யும் பணி முக்கியமானது, என்னால் எனது கடமையை கைவிட்டு செல்ல முடியவில்லை’ எனக் கூறினார்.

தனது பணியை முடித்த பின்னர், பிரபாத் தனது கிராமத்திற்கு 200 கி.மீ. தூரம் பயணம் செய்து தனது தாயின் இறுதி சடங்குகளை செய்தார். இதற்கிடையே, சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்துவிட்டு பணிக்கு திரும்புமாறு பிரதாப் கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும், உடனடியாக பணியில் சேர விரும்பியுள்ளார். பிறர் உயிரைக் காப்பாற்றி தனது தாயை பெருமைப்படுத்துவதே தனது குறிக்கோள் என்று பிரதாப் கூறியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நெறுக்கடியான நேரங்களில் மக்களுக்கு உதவும் பிரபாத் போன்றோரின் அர்ப்பணிப்பு வியப்பிற்குரியதே!
Published by:Archana R
First published: