Vaccine : ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்

கொரோனா தடுப்பூசி

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

  • Share this:
    உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் மந்தநிலை நீடித்து வருகின்றது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதரா நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது.

    இதனால், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

    பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாட்டில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.‌

    இந்த கூட்டத்தில் உலகளாவிய கொரோனா தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உறுதி ஏற்றனர்.

    அத்துடன், கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகளாவிய சமமான அணுகுமுறையை உறுதி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று வரையில், நாட்டில் 20 கோடியே 4,94,991 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Read More : கொரோனா தடுப்பூசி கையில் மட்டுமே செலுத்தப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

     

    97,79,304 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 67,18,723 பேர் 2ஆவது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1 கோடியே 50,79,964 பேர் முதல் டோசும், 83,55,982 பேர் 2ஆவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர். 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினர் 1 கோடியே 19,11,759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    Must Read : கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றுக்கு ஆளான முதல்நபர் - மருத்துவர்கள் அதிர்ச்சி.. அறிகுறிகள் என்ன?

     

    45 வயது முதல்60 வயது வரையிலான பிரிவினர் 6 கோடியே 15,48,484 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 99,15,278 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 69,15,863 பேர் முதல் டோசும், 1 கோடியே 83,13,642 பேர் இரண்டாவது டோசும் பெற்றுக்கொண்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published: