ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஸென்கா தடுப்பூசிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஸென்கா தடுப்பூசிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதை தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழி என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஸென்கா தடுப்பூசிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதை தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழி என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஸென்கா தடுப்பூசிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 • Share this:
  லண்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இது அடுத்தடுத்த உருமாற்றங்களின்போது கடும் விளைவுகளை உருவாக்கும் தன்மையை பெறும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு எனக் கூறியுள்ள அவர்கள், தடுப்பூசியால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, உருமாற்றம் அடைவதும் தடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

  இந்நிலையில் கொலம்பியாவில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க இருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி திட்டத்திற்காக, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 35 மில்லியன் டோஸ் மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக பைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரஸென்கா இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கும் ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ்.. ஒரு வார காலத்துக்கு வீட்டுத் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை..

  இதையடுத்து, இந்தியாவிடம் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராஸென்கா தடுப்பூசியை வாங்க இருப்பதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டிலேயே தடுப்பூசியை தயாரிக்க அஸ்ட்ராஸென்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: