Corona in Rural India | இந்திய கிராமங்களில் கொரோனா தாண்டவம்: குடும்பங்களுக்கு ஏற்படும் அழிவு- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா அச்சத்தில் பாசி கிராம மக்கள்.

பெரிய நகரங்களில் கொரோனா 2வது அலை தலைவிரித்தாடி சற்றே குறைந்து வரும் நேரத்தில் இந்திய கிராமங்களில் கொரோனா தொற்று தாண்டவமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  • Share this:
    பெரும்பாலான கிராமங்களில் கொரோனாவைத் தடுக்கவோ, எதிர்த்துப் போராடவோ வழியில்லை. தலைநகர் புதுடெல்லியிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் பாசி என்ற கிராமத்தில் 5,400 பேர் வசிக்கின்றனர், இதில் முக்கால்வாசிப் பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளது. கடந்த 3 வாரங்களில் 30 பேர் மரணமடைந்துள்ளனர்.

    இங்கு மருத்துவ சிகிச்சை மையம் இல்லை. மருத்துவர்கள் இல்லை, ஆக்சிஜனும் இல்லை. நகரத்தில் வாழும் மக்களுக்காகவது எழுத்தறிவு உள்ளதால் சமூக ஊடகங்களில் நிலைமையைக் கூறி உதவி கோர முடிகிறது, இவர்களுக்கு அந்த வசதியும் இல்லை.

    இந்நிலையில் கிராமங்கள், சிறு ஊர்களைச் சேர்ந்த 18 பிரதிநிதிகள் கொரோனா தாக்கத்தை கிராமங்களில் பார்த்து செய்தி நிறுவனம் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். குடும்பம் குடும்பமாக ஏற்படும் அழிவு, கங்கா நதியில் உப்பிய நிலையில் வந்து சேரும் உடல்கள் என்று அனைத்து நிலவரங்களையும் பகிர்ந்துள்ளனர்.

    இதில் ஒருவரான சஞ்சீவ் குமார் என்பவர் கூறுகையில், “பெரும்பாலான கிராம மரணங்கள் ஆக்சிஜன் இல்லாததாலேயே” என்றார். நோய்வாய்ப்பட்டவர்கள் மாவட்ட தலைமையகத்துக்கு வருகின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவித்தார் அவர். இதில் போகும் வழியிலேயே மரணம் நிகழ்ந்து விடுகிறது.

    அதிகாரப்பூர்வ தகவல்களை விட கொரோனா சேத விவரம் இன்னும் மோசமாக உள்ளதாக இந்த 18 பிரதிநிதிகளும் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தனர். கிராமங்களில் நோய் பாதித்தாலும் அவர்கள் வீடுகளை விட்டு கிளம்ப மறுக்கின்றனர்.

    சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களினால் உத்தரப் பிரதேச கிராமங்களில் கொரோனா பரவியதாக அங்கு கிராமத்தலைவர்கள் செய்தி நிறுவனத்திடம் கூறுகின்றனர். தேர்தல் களப்பணியாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பரவிவரும் நேரத்தில் தேர்தலை வைத்ததைத்தான் இந்த பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    மே மாதம் 14ம் தேதியே பிரதமர் மோடி, “கொரோனா குறித்து உங்களை எச்சரிக்க விரும்புகிறேன், கிராமங்களில் தொற்று பரவி வருகிறது” என்று மாநில முதல்வர்கல் மாநாட்டில் தெரிவித்தார்.

    கிராமங்களில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டாலும் கிராம மக்கள் காய்ச்சல் இருந்தால் மறைக்கின்றனர். கிராமங்களில் கொரோனா வேகமாகப் பரவினாலும் அங்கு மக்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள், என்று எதுவும் வழங்கப்படுவதில்லை என்று பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

    மார்ச் 31 முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை கும்பமேளா கண்ட உத்தரகண்டில் சுமார் 9 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர், இதனால் இங்கும் 20 மடங்கு கொரோனா பரவ்ல் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது.

    ரிஷிகேசம், ஹரித்துவாருக்கு புனிதப் பயண ஏற்பாடு செய்யும் நவின் மோகன் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ரிஷிகேசில் நோய் தொற்றாத வீடே இல்லை எனலாம் ஹரித்துவாரிலும் இதே நிலைதான்” என்கிறார்.
    Published by:Muthukumar
    First published: