இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று..?

இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று..?
அலெக்ஸ் ஹேல்ஸ்
  • Share this:
இங்கிலாந்து அணியின் பிரபல அதிரடி பேஸ்ட்மேன் அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது.

உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்தியா - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்களும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றாலும் அந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஒத்திவைக்கபட்டு வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள்.


பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகள் இருந்து உள்ளது. இதனால் அவர்க்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். கொரோனா அறிகுறி இருப்பதால் அவரே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்