கொரோனோ நடைமுறை விதிமீறல் - இங்கிலாந்து பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு தடை

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வகுத்த கொரோனோ தடுப்பு உயிர் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனோ வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இங்கிலாந்து, முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகளை தொடங்கியுள்ளது. இப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் கொரோனோ தடுப்பு விதி உயிர் பாதுகாப்பு சுழல் விதிமுறைகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ளது.

Also read... இங்கிலாந்து - மே.இ தீவுகள் 2-வது டெஸ்ட் போட்டி... மான்செஸ்டரில் இன்று பிற்பகல் தொடக்கம்

இந்த கொரோனோ தடுப்பு உயிர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு ஐந்து நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நாட்களில் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு நெகட்டிவ் வரும் பட்சத்தில் அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. என்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் உயிர் பாதுகாப்பு என்பதால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என ஆர்ச்சர் வருத்தமளித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போது மனைவி பிரசவத்திற்கு சென்ற ஜோ ரூட் அணிக்கு திரும்பியுள்ளார். அவரே எஞ்சிய போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: