இங்கிலாந்து பிரதமரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா - ஆறுதல் தெரிவித்த மோடி

இங்கிலாந்து பிரதமரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா - ஆறுதல் தெரிவித்த மோடி
மாட் ஹேன்காக்
  • Share this:
இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவால் 11,600 பேர் பாதிக்கப்பட்டும் 578 உயிரிழந்தும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 71 வயதான இங்கிலாந்து இளவரசர் சர்லாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அவரே உறுதி செய்துள்ளார். அதனையடுத்து, வீட்டிலேயே தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக்குக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதித்துள்ள பதிவிட்ட வீடியோ பிரதமர் பதிலளித்துள்ளார்.

அதுதொடர்பாக அவருடைய பதிவில், ‘நீங்கள் மிகச்சிறந்த போராளி. நீங்கள் சவாலில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இங்கிலாந்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதைப் பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Also see:
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading