• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை - குழந்தைகளைக் காக்கும் பணியில் தம்பிதுரை

ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை - குழந்தைகளைக் காக்கும் பணியில் தம்பிதுரை

Youtube Video

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார் டயாலிசிஸ் டெக்னிசீயன் தம்பிதுரை

  • News18
  • Last Updated :
  • Share this:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மானியதஅல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பிதுரை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டயாலிசிஸ் டெக்னீசியன் ஆக மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்,

கொரோனோ தொற்று காலம் துவங்கி கடந்த 70 நாட்களுக்கு மேலாக விடுமுறையே இல்லாமல் அவர் பணியாற்றி வருகிறார்.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து சில துணிகளுடன் மருத்துவமனையில் வந்து தங்கியிருந்து தற்போது வரை ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் பணியாற்றிவரும் தம்பி துரையை மருத்துவமனையின் அத்தனை ஊழியர்களும் மனமாரப் பாராட்டி வருகிறார்கள்.

இவருடன் சேர்ந்து பணியாற்றி வந்த டயாலிசிஸ் டெக்னீசியன் ஊரடங்கு காரணமாக வெளியூரில் சிக்கிக்கொண்டார். இதனால் தொடர்ந்து இவர் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு திறம்பட பணியாற்றி வருகிறார்.

ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய குழந்தைகளுக்கு, ஒரு நாள் தாமதமாக சிகிச்சையை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் தொடர்ந்து பணியாற்ற தயாராகி விட்டேன் என்கிறார் தம்பிதுரை. வீட்டிற்கு ஒரே மகனான தம்பிதுரை எப்பொழுது வருவார் என்று ஆவலுடன் அவருடைய பெற்றோர்கள் இருந்தாலும், தற்போது இருக்கக்கூடிய இந்த தருணத்தில் என் பணியே எனக்கு முக்கியம் என கருதி பணியாற்றி வருகிறார்

தினசரி 5 குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்து வரும் தம்பிதுரை அவர்களின் மழலை சிரிப்பில், தன்னை உத்வேக படுத்திக் கொள்வதாக கூறுகிறார். ”தொடர்ந்து பணியாற்றுவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது. ஆனால், வலியுடன் வரும் குழந்தைகள் டயாலிசிஸ் கொடுத்த பிறகு சிரித்த முகத்துடன் இல்லம் திரும்புவார்கள் அதனை பார்க்கும் பொழுதெல்லாம் விடுமுறை எடுக்க விருப்பம் இருக்காது. ஆனாலும், வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் அம்மாவிடம் வீடியோ காலில் பேசி மகிழ்வேன்” என்கிறார் தம்பிதுரை

அதேபோல் மருத்துவமனையில் இருக்கும் அத்தனை ஊழியர்களும் தன்னிடம் நட்பாக பழகி உணவு, பகிர்ந்து கொள்வார்கள். என் நண்பர்கள் அவ்வப்போது என்னை வந்து சந்திப்பார்கள். இதுபோன்ற தருணங்கள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.

”முதலில் டயாலிசிஸ் டெக்னீசியன் ஆக பணியாற்றுவது எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இங்கே வரும் ஒவ்வொரு குழந்தைகளும் வலி தாங்க முடியாமல் அழுகின்ற காட்சியை பார்க்க முடியாது. ஆனால் டயாலிசிஸ் செய்த பிறகு அவர்கள் சிரிக்கக்கூடிய காட்சிகளை பார்த்தால் அதை அப்படியே மறந்து விடும். அதற்காகவே இந்த பணியை நான் பிடித்து செய்ய ஆரம்பித்து விட்டேன். தற்போது என்னிடம் குழந்தைகள் உடனே ஒட்டிக் கொள்வார்கள்” என்றார் தம்பிதுரை.

தம்பிதுரை


தனது தொடர் பணிகளை அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று நேரில் வந்து பாராட்டியது எனக்கு மேலும், ஊக்கம் அளிப்பது போல இருந்தது. இந்த தொற்று காலம் முடிவடைந்தாலும் என் பணி எப்பொழுதும் முடிவடையாது என்றார் தம்பிதுரை

தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக பணியாற்றிய டயாலிசிஸ் டெக்னீசியன் தம்பிதுரை தற்காலிக பணியாளர் என்பது சற்று வேதனை தரும் தகவல். அவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும் என்பது அங்கு உள்ள அனைத்து ஊழியர்களின் எண்ணமாக உள்ளது. அரசு நிறைவேற்ற வேண்டும்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: