தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்து  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்து  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

 • Share this:
  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்து  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.   தலைமைச்செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறை, வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலகங்கள் தவிர மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில்,  பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

  இது தொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  ‘தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை  செலுத்துவதற்கான கடைசி நாள் 10.05.2021 முதல் 24.05.2021 வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த 31.05.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

  மேலும், ஏற்கனவே மின்நுகர்வோர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், 10.05.2021 முதல் 24.05.2021 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், மே 2019-ம் ஆண்டில் (கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.

  புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள்              மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி அதாவது மார்ச் 2021-ன் கணக்கீட்டுப்படி மின்கட்டணம் செலுத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மே மாத மின் கட்டணம் ஜூலை மாதத்தில் முறைப்படுத்தப்படும் என்றும் மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: