துபாய் வழியாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழர்கள் 14 பேர் நேற்று துபாய் வழியாக தமிழகம் திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டனர்.

துபாய் வழியாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப்படம்)
  • Share this:
துபாய் வழியாக நேற்று தமிழகம் திரும்பிய 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ளத் தேவையில்லை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அங்கு பணியாற்றி வந்த தமிழர்கள் 14 பேர் நேற்று துபாய் வழியாக தமிழகம் திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் தேவையில்லாமல் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேட்டுக் கொண்டார்.

Also see:


First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading