ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி 2017-ல் எச்சரித்த போது என்னைக் கைது செய்தார்கள், கொரோனா நோயாளிகளுக்குச் சேவையாற்றத் தயார்: மன்றாடும் டாக்டர் கபீல் கான்

ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி 2017-ல் எச்சரித்த போது என்னைக் கைது செய்தார்கள், கொரோனா நோயாளிகளுக்குச் சேவையாற்றத் தயார்: மன்றாடும் டாக்டர் கபீல் கான்

டாக்டர் கபீல் கான்.

2017-ம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய உத்தரப் பிரதேச மாநில கோரக்பூர் மருத்துவமனை சம்பவத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 60 குழந்தைகள் பலியான போது நீக்கப்பட்ட டாக்டர் கபீல் கான், கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தன்னை கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக அரசிடம் மன்றாடியுள்ளார்.

  • Share this:

    ஆனால் உ.பி.அரசோ இதற்குரிய இணையதளம் மூலம் அரசை முறைப்படி அணுகவும் என்று கூறியுள்ளது.

    ஏப்ரல் 17ம் தேதி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில் டாக்டர் கபீல் கான் தனது 15 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தைச் சுட்டிக்காட்டி குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவு விவகாரங்களில் தனக்கு இருக்கும் அனுபவத்தை அடிக்கோடிட்டு தன்னை மீண்டும் அனுமதிக்குமாறு மன்றாடியுள்ளார். நெருக்கடி முடிந்த பிறகு மீண்டும் இடைநீக்கம் செய்யுங்கள் ஆனால் இப்போதைக்கு சேவையாற்ற அனுமதியுங்கள் என்று கெஞ்சியுள்ளார் டாக்டர் கபீல் கான்.

    கோவிட் 19 இரண்டாம் அலையில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற காத்திருக்கிறேன், தயவு கூர்ந்து என்னை அனுமதியுங்கள் என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் உ.பி. அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் தி பிரிண்ட் என்ற ஆங்கில ஊடகத்துக்கு டாக்டர் கபீல் கான் கூறும்போது, “உ.பி. மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே நெருக்கடியில் உள்ளது. கடந்த ஓராண்டில் கொரோன பாதிப்பில் 1,000 மருத்துவர்களுக்கும் மேல் பலியாகியுள்ளனர். ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. உ.பி.யில் படுமோசமாக உள்ளது, சுகாதாரத்துறை உடைந்து நொறுங்கி விட்டது. கிராமப்புற பகுதிகளில் ஸ்வாப் டெஸ்ட்கள் நடைபெறவே இல்லை, அதற்கான வசதியும் இல்லை” என்றார்.

    22 ஆகஸ்ட் 2017 முதல் டாக்டர் கபீல் கான் சஸ்பென்ஷனில் உள்ளார். தொடக்கத்தில் அவரை ஒரு ஹீரோ என்றனர், அவர்தான் ஆக்சிஜன் சப்ளை செய்தார் என்று கொண்டாடினர், ஆனால் திடீரென உ.பி. அரசு ஆக்சிஜன் பற்றாக்குறைக்குக் காரணமென அவரை சஸ்பெண்ட் செய்தது.

    தற்போது சொந்தமாகவே மருத்துவ சேவையில் சில மருத்துவர்களுடன் சேர்ந்து குக்கிராமங்களுக்குச் சென்று சேவையாற்றி வருகிறார். அலகாபாத் கோர்ட் நான் குற்றமற்றவன் என்று கூறியும் எனக்கு இன்னும் பணி கிடைக்கவில்லை, என்னுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் இணைந்து விட்டனர் என்று ஆதங்கப்படுகிறார் டாக்டர் கபீல் கான்.

    “என் மீது ஏன் இத்தனை காட்டம், பாரபட்சம்? நான் கொரோனா நோயாளிகளுக்காக சேவையாற்ற விரும்புகிறேன், வேண்டுமானால் இந்த நெருக்கடி ஓய்ந்தவுடன் என்னை மீண்டும் சஸ்பெண்ட் செய்து கொள்ளட்டும்” என்று மன்றாடியுள்ளார் டாக்டர் கபீல் கான்.
    Published by:Muthukumar
    First published: