N440K : கொரோனாவை விட 15 மடங்கு வீரியமிக்க புதியவகை கொரோனா வைரஸ்!: பரவல் குறைந்துள்ளதாக தகவல்

N440K : கொரோனாவை விட 15 மடங்கு வீரியமிக்க புதியவகை கொரோனா வைரஸ்!: பரவல் குறைந்துள்ளதாக தகவல்

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் , முந்தைய வைரஸ்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த வைரஸின் பரவல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:

    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது.  கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகைகளும் மக்களிடம் பரவி வருகிறது. ஆந்திராவில் பரவிவரும் N440K என்னும் புதியவகை உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.சி.எம்.பி.) ஆய்வுப்படி இந்த உருமாறிய கொரோனா வகை ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்திய வகைகளான B1.617 and B1.618 வைரஸ்களை விட இந்த உருமாறிய வைரஸ் கடுமையானது என்றும் முந்தைய கொரோனா வைரஸ்களை விட 15 மடங்கு தீவிரமானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    இது தொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினெய் சந்த் கூறுகையில், தற்போது எந்த வகை கொரோனா பரவிவருகிறது என்பது ஆய்வு முடிவு கிடைத்த பிறகே தெரியவரும். எனினும், தற்போது விசாகப்பட்டினத்தின் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகை, முந்தைய வகைகளை விட வித்தியாசமானது என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல், மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியான பி.வி.சுதாகர் கூறுகையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரொனா முழுமை அடைவதற்கு குறைந்த காலமே எடுத்துக்கொள்கிறது. அதன் வீரியம் தீவிரமாக உள்ளது. முந்தைய வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலைக்கு செல்ல ஒரு வாரம் ஆகும். ஆனால், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 4 நாட்களிலேயே ஆபத்தான நிலைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், தற்போது தென் மாநிலங்களில் N440K வைரஸை மட்டுப்படுத்தி  B.1.617  எனப்படும் இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரஸ், பிரிட்டன் வைரஸ் ஆகியவை வேகமாக பரவிவருவதாக சி.சி.எம்.பி. ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இவை N440k வைரஸை விட தீவிரம் குறைந்தவையாக கருதப்படுகிறது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: