• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பேருந்தில் பயணமா? நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதது என்னென்ன?

பேருந்தில் பயணமா? நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதது என்னென்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நீங்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில நடவடிக்கைகள் குறித்து அறிந்துவைத்திருப்பது அவசியம்.

  • Share this:
கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்றுநோய் இன்னும் எந்த நாட்டிலும் முடிவுக்கு வரவில்லை. மேலும், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவமனைகளும் அரசாங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதை அடுத்து, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர்.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். பின்னர், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இ-பாஸ் அனுமதியுடன் மாநிலங்களுக்குள் செல்ல அனுமதி கிடைத்தது. பின்னர் மாநிலங்களுக்கிடையே இ-பாஸ் உதவியுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு இ-பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்தில் பயணம் மேற்கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பேருந்து சேவைகளும், ரயில் சேவைகளும் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் தொடங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஒருவர் வெளியே செல்ல வேண்டுமானால், சமூக இடைவெளி, தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், நீங்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில நடவடிக்கைகள் குறித்து காண்போம்.

Also read: இந்தியா மூலம் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் - சீனா விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு

பேருந்தில் பயணம் செய்யும்போது நீங்கள் செய்ய வேண்டியவை

* தேவையற்ற தொடர்பைத் தவிர்க்க ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.

* எப்போதும் உங்கள் சொந்த முகக்கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

* எந்தவொரு பயணத்திற்கு முன்பும் உங்கள் உடல் வெப்பநிலை சீராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* பேருந்தில் பயணம் செய்யும்போது எப்போதும் முகக்கவசங்களை அணிய வேண்டும். உங்கள் மூக்கு மற்றும் வாய் சரியாக மூடி இருப்பதை உறுதி செய்யுங்கள்.

* குறிப்பாக பேருந்தில் ஏறுவதற்கு முன்னும், இறங்கியதற்குப் பின்னும் கைகளைத் தவறாமல் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

* தும்மும் போதும், இருமும் போதும் டிஷ்சு பேப்பரைப் பயன்படுத்துங்கள். டிஷ்சு பேப்பர் இல்லை என்றால் உங்கள் கை ஸ்லீவ் மூலம் வாயை மறைத்தபடி இதனைச் செய்யலாம்.

* நீங்கள் நீண்ட தூரம் அல்லது ஒரு இரவு முழுவதும் பயணம் செய்கிறீர்கள் என்றால் உங்கள் சொந்த துணி, போர்வைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் எடுத்துச் செல்லுங்கள்.

* நீங்கள் பயணிக்கும் மாநிலத்தில் வழங்கப்பட்ட பிரத்யேக வழிகாட்டுதல்கள் குறித்து எப்போதும் அப்டேட்டடாக இருங்கள்.

பேருந்து பயணத்தில் செய்யக்கூடாதவை

* உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் பேருந்தில் பயணம் செய்யவேண்டாம்.

* பயணத்தின்போது உங்கள் முகம், மூக்கு மற்றும் வாய் பகுதிகளை அடிக்கடி தொடாதீர்கள்.

* பேருந்துகளில் பயணம் செய்யும்போது தேவையில்லாமல் உங்கள் முகக்கவசங்களைக் கழற்ற வேண்டாம்.

* முடிந்தவரை பேருந்தில் உள்ள கிராப் ரெயில்ஸ், சுவிட்சுகள், கைப்பிடிகள், ஹெட்ரெஸ்ட்கள், ஆர்ம்ரெஸ்ட்கள் ஆகியவற்றைத் தொடாதீர்கள்.

* பேருந்தில் நீங்கள் பயன்படுத்திய டிஷ்சுக்கள், முகக்கவசங்கள், கையுறைகள் அல்லது வேறு எந்த பாதுகாப்பு கருவிகளையும் அப்படியே விட்டுச் செல்லாதீர்கள். அதனை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது என்பதால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: