புதுவித கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

புதுவித கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

கடந்த 10 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த 1078 பேரை கண்டறிந்துள்ளோம். அவர்களை கண்காணித்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம்.

 • Share this:
  புதுவித கொரோனா வைரஸ் என தகவல்தான் வந்துள்ளது என்றும் ஆனால் அதன் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறிய, தமிழக சுகாராரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது குறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய ரக கொரோனாவால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

  கடந்த 10 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த 1078 பேரை கண்டறிந்துள்ளோம். அவர்களை கண்காணித்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம். இங்கிலாத்தில் இருந்து டெல்லி வழியே சென்னை வந்த ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக இது புது வித மாற்றம் அடைந்த தொற்று என்று யாரும் அச்சப்பட வேண்டாம். அவர் உடல்நிலை சீராக இருக்கிறது.

  அவரது ரத்த மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அது எந்த வகை வைரஸ் தோற்று என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். புதுவித வைரஸ் என தகவல்தான் வந்துள்ளது. ஆனால் அதன் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால் யாரும் அச்சப்பட வேண்டாம்.

  இங்கிலாந்தில் இருந்து மற்ற நாடுகள் வழியாக தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் தனிமை படுத்தப்படுவார்கள். இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உறுதியானாலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: