களத்தில் சச்சினிடம் பேசாதே: மீறினால் நாள் முழுவதும் வருத்தப்படுவாய் - பிரட் லீக்கு மெக்ராத் கொடுத்த அட்வைஸ்

ஆஸ்திரேலிய அதி வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தான் விளையாடிய காலத்தில் சக பந்துவீச்சாளரும் ஜாம்பவானுமான மெக்ராத் தனக்கு வழங்கிய அறிவுரையை பகிர்ந்துள்ளார்.

களத்தில் சச்சினிடம் பேசாதே: மீறினால் நாள் முழுவதும் வருத்தப்படுவாய் - பிரட் லீக்கு மெக்ராத் கொடுத்த அட்வைஸ்
சச்சின் - மெக்ராத்
  • Share this:
களத்தில் சச்சினிடம் பேசாதே, மீறினால் நாள் முழுவதும் வருத்தப்படுவாய்  என்று மெக்ராத் கூறினார்.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் விளையாட்டுப் போட்டிகள் ஏதுமின்றி வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் ஓய்வெடுத்து வருகின்றனர். ஓய்வு நேரங்களில் முன்னாள், இந்நாள் வீரர்கள் தங்களுடைய அனுபவங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய அதி வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தான் விளையாடிய காலத்தில் சக பந்துவீச்சாளரும் ஜாம்பவானுமான மெக்ராத் தனக்கு வழங்கிய அறிவுரையை பகிர்ந்துள்ளார்.


மெக்ராத் புதிதாக அணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளம் பந்து வீச்சாளர்களின் பயிற்சியாளராக களத்தில் செயல்படுவார். பந்துவீசும் போது இளம் பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரைகளை வழங்குவார். அப்போது சச்சின் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். நான் பந்துவீச தயாரான போது மெக்ரத் அருகில் வந்து சச்சினிடம் எதுவும் பேசாதே, அவரை சீண்டாதே மீறினால் அவரை தூண்டிவிடுவதற்கு சமம். ஏன் பேசினோம் என்று  நாள் முழுவதும் வருத்தப்படும் அளவிற்கு அவருடைய ஆட்டம் அதிரடியாக வெளிப்படும் என அறிவுரை கூறுவார். என்னிடம் மட்டும் அல்ல என்னை போன்ற சக இளம் வீரருக்கும் இதைத்தான் மெக்ராத் கூறுவார்.

ஆஸ்திரேலிய வீரர்களின் வெற்றிக்கு அவர்களுடைய திறமையுடன் எதிரணி வீரர்களை மனதளவில் பலவீனப்படுத்தும் முயற்சியும் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்னை வம்புக்கு இழுத்து கோபத்தை தூண்டிவிட்டு விக்கெட் எடுப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அது சச்சினிடம் எடுபடவில்லை என்பது பிரட் லீ - க்கு மெக்ராத் கூறிய அறிவுரையிலிருந்து நமக்கு தெரிய வருகிறது.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading