ஹோம் /நியூஸ் /கொரோனா /

கோவிட் தடுப்பூசி காந்தத்தன்மை, டி.ஏன்.ஏ மாறுபாட்டுக்கு வழிவகுக்குமா! -நிபுணர்களின் விளக்கம்..

கோவிட் தடுப்பூசி காந்தத்தன்மை, டி.ஏன்.ஏ மாறுபாட்டுக்கு வழிவகுக்குமா! -நிபுணர்களின் விளக்கம்..

கொரோனா தடுப்பூசி போட்டால் சிலர் உடலில் காந்தத்தன்மை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.அதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ளுங்கள்..

கொரோனா தடுப்பூசி போட்டால் சிலர் உடலில் காந்தத்தன்மை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.அதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ளுங்கள்..

கொரோனா தடுப்பூசி போட்டால் சிலர் உடலில் காந்தத்தன்மை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.அதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ளுங்கள்..

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தாலும், அவற்றைப் பற்றிய புரளிகளும் கூடவே உலா வந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசிகள் பற்றிய நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்த நிலையில், காந்தத்தன்மை, மலட்டு தன்மை மற்றும் டி.என்.ஏ மாறுபாட்டுக்கு வழிவகுப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா அளித்துள்ள விளகத்தை பார்க்கலாம்.

தடுப்பூசி காந்தத்தன்மையை ஏற்படுத்துகிறதா?

தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து மக்களிடையே ஏற்கனவே பரவலான தயக்கம் இருக்கும் நிலையில் ஒரு சிலர், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு காந்தத்தன்மை ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் உடலில் இரும்பு, அலுமினிய பொருட்கள் ஒட்டிக்கொள்வதாக புகைப்படங்களையும் வீடியோவையும் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா, இதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளார். பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் இபோன்ற விந்தையான செயல்களில் ஈடுபடலாம் எனக் கூறியுள்ள அவர், அதற்காக பேஸ்ட் அல்லது பசைகளை பயன்படுத்தலாம் என விளக்கமளித்துள்ளார். நிக்கல், கோபால்ட், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவைகளுக்கும், தடுப்பூசிகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண், பெண்களுக்கு மலட்டு தன்மையை ஏற்படுத்துமா?

ஆண் மற்றும் பெண்களிடையே மலட்டு தன்மையை தடுப்பூசி ஏற்படுத்தாது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் முதலில் விலங்குகளிடமும், பின்னர் மனிதர்களிடமும் பல்வேறு கட்டங்களாக பரிசோதித்த பின்னரே முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு கொரோனா தடுப்பூசியும் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சான்றுகள் இல்லை.

தடுப்பூசியின் விளைவுகள் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்பது உண்மையா?

இதில் உண்மையில்லை. அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு நிலை பரிசோதனையிலும் தடுப்பூசிகளின் தரம் குறித்து பரிசோதிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறியது முதல் பெரிய அளவிலான கிளினிக்கல் டிரையலை தடுப்பூசி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், உலகளவில் அனைத்து நாடுகளும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவித்து வருகின்றனர். தடுப்பூசி குறித்து எந்த புகாரும் இதுவரை பெரியளவில் எழவில்லை. சிறிய அல்லது பயப்படத்தேவையில்லாத அளவிலான பாதிப்புகள் இருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது வைரஸ் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.

AlsoRead : கொரோனா 3ஆவது அலை..ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகள் இறப்பை ஏற்படுத்துமா?

தடுப்பூசி என்பது ஊசி மூலமாக உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வைரஸூக்கு எதிராக போராடுவதற்கு தயார் செய்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது ஒரு சிலருக்கு பொதுவான காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். அவை பயப்படத்தகுந்தவையாக இருக்காது. மிகவும் அரிதினும் அரிதாக ஒரு சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

மைக்ரோ சிப் மற்றும் டி.ஏ.என் கதைகள்..!

கோவிட் வேக்சினில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் மக்கள் கண்காணிக்கப்படுவதாகவும் புரளிகள் பரவுகின்றன. அதில் உண்மையில்லை. அதேபோல், கொரோனா தடுப்பூசிகள் டி.ஏன்.ஏவை மாற்றும் என்ற தகவலிலும் உண்மையில்லை. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளில்கூட என்சைன்கள் இருப்பதில்லை. அதனால் டி.என்.ஏ மாறும் போன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Corona