Home /News /coronavirus-latest-news /

தனியார் ஆய்வகங்களிலும் இலவசமாக கொரோனா பரிசோதனை - அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

தனியார் ஆய்வகங்களிலும் இலவசமாக கொரோனா பரிசோதனை - அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

மாதிரிப்படம். (Photo: Reuters)

மாதிரிப்படம். (Photo: Reuters)

ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா பரிசோதனைக்கு தனியார் மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே படைவீரர்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த போரில் மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    அதேநேரத்தில் தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அந்த கட்டணத்தை அரசே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    மேலும் ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, SC, Supreme court

    அடுத்த செய்தி