கொரோனா என்றால் மரணம் அல்ல: எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், எண்ணிக்கைகள் வைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரோனா என்றால் மரணம் அல்ல: எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
  • Share this:
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொருக்குப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்காளை சந்தித்த அவர்,
தமிழகம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 32,000மாகவும், சென்னையில் 9,000 முதல் 10,000மாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.


எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் மூலம் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலே அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதையே அரசின் பிரதான நோக்கம்.

சென்னையில் உள்ள 39,000 தெருக்களில், 9,509 தெருக்களில் மட்டும்தான் தொற்று உள்ளது. இதில் 812 தெருக்களில் மட்டுமே 5-க்கும் மேற்பட்ட தொற்று உள்ளது. குடிசை பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா என்றால் மரணம் என்ற எண்ணத்தில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொண்டையில் வரக் கூடிய இதர வைரஸ் காய்ச்சல் போன்றதுதான் கொரோனா. எனவே, நோயாளிகள் தப்பித்து ஓடுவது, தற்கொலை செய்வது, நோயாளிகளை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளை அழைத்து வர கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்கவும், தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சர்க்கரை நோயாளிகள் 99% குணமடைய, மருந்து, உணவுகளை உரியமுறையில் உட்கொண்டாலே போதும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க பல்வேறு இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா மரணங்களை மறைத்தல் உள்ளிட்ட குளறுபடி செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’என்று தெரிவித்தார்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading