மக்களை மாஸ்க் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளபோதிலும் அதிபர் டிரம்ப் முக கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மக்களை மாஸ்க் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் -  அமெரிக்க அதிபர் டிரம்ப்
மக்களை மாஸ்க் அணியுமாறு உத்தரவிட மாட்டேன்
  • Share this:
அமெரிக்க மக்களை முககவசம் அணியுமாறு ஒரு போதும் உத்தரவிட மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளபோதிலும் அதிபர் டிரம்ப் முக கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து பேசிய தொற்றுநோய் நிபுணரான அந்தோணி ஃபாசி முக கவசம் அணிவது முக்கியமானது என்றும் மத்திய, மாகாண அரசுகள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ : அயோத்தியில் எவ்வளவு பரப்பளவில் ராமர் கோயில் அமைய உள்ளது? அதன் சிறப்புகள் என்ன?


இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டிரம்ப், முக கவசம் அணிவது குறித்து ஆணை பிறப்பிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading