ட்ரம்ப் 'அமெரிக்க வைரஸ்'... கொரோனா 'சீன வைரஸ்' என்ற அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலடி

அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • Share this:
  கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் ட்வீட் செய்துள்ளதால் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  கொரேனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வாஷிங்டன், கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் ஆகிய மாகணங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரேனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வாஷிங்டன், கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் ஆகிய மாகணங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் சமீபத்தில் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கும் தொற்று ஏதுமில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஏர்லைன்ஸ் மற்றும் பிறத்தொழில்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். முன்பை விட நாம் பலமாக இருப்போம்“ என்றுள்ளார்.  ட்ரம்ப் சீன வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளதற்கு பலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். கொரேனா சீன வைரஸ் என்றால் அமெரிக்க வைரஸ் ட்ரம்ப் என்றும் கேலி செய்து வருகின்றனர்.  Also see:
  Published by:Vijay R
  First published: