ஹோம் /நியூஸ் /கொரோனா /

US election Results 2020: கொரோனா பரவல் காலத்தில் டிரம்ப் பேசிய சர்ச்சை கருத்துகள் என்னென்ன?

US election Results 2020: கொரோனா பரவல் காலத்தில் டிரம்ப் பேசிய சர்ச்சை கருத்துகள் என்னென்ன?

டிரம்ப்

டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனுக்கு ஆதரவு பெருக, தற்போதைய அதிபர் டிரம்ப் கொரோனாவை கையாண்ட விதம், கொரோனா பெருந்தொற்று உலகை ஆட் கொண்டதிலிருந்து அவர் கூறிய சர்ச்சை கருத்துக்கள் என்னென்ன?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உயிர் கொல்லி நோயான கொரோனா, அமெரிக்காவில் மட்டும் 2,30,000 பேரை கொன்றுள்ளது. கொரானாவின் வீரியத்தை எப்போதும் குறைத்த மதிப்பிட்டே வந்துள்ளார் டிரம்ப். கொரோனா அலை அமெரிக்காவில் வீச தொடங்கிய போது, நாட்டின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது கொரோனா வைரஸ் மாயமாக மறைந்துவிடும் என கூறினார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாத்தில் உஷ்ணம் ஏற்பட்டால் கொரோனா மாயமாகிவிடும். பின்னர் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் Chloroquine மாத்திரைகள் கொரோனா சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இந்த மாத்திரை, கொரோனாவிற்கு பெரும் பயனளிக்கும் என்று கூறினார்.

ஏப்ரல் மாதத்தில், வெப்பம், ஒளி, கிருமி நாசினி ஆகியவற்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் கிருமி நாசினி கொரோனா வைரசை ஒரு நிமிடத்தில் அழித்து விடுவதை பார்க்கிறேன் என்றவர், அதனை ஊசியின் மூலம்  உடலில் செலுத்தினால் நுரையீரலை சுத்தப்படுத்தி விடும் என்று கூறி அனைவரையும் அதிர்சியடைய செய்தார்.  அதன் பிறகு அமெரிக்காவில் கொரோனா அதிகமாக பரவியது. அதற்கு காரனம் சீனா தான்என்றும் தெரிவித்தார். அன்று முதல் கொரோனாவை ட்ரம்ப் சீன வைரஸ் என்றே அழைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அதிபர் வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சியின் போது, ஜோ பைடன் எப்போதும் முகக்கவசத்துடன் காணப்படுவதை விமர்சித்தார்.

மேலும் படிக்க...அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்.. அடுத்த அதிபர் யார்?

எனக்கு எப்போது தேவையோ, அப்போது நான் முகக்கவசம் அணிந்துகொள்வேன். பைடன் எப்போது பார்த்தாலும் முகக்கவசம் அணிந்துக் கொள்கிறார். அவர் எனக்கு 200 அடி தள்ளி நின்று தான் பேசுகிறார். ஆனால் நான் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய முகக்கவசத்துடன் காணப்படுகிறார் என விமர்சித்தார்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் மையத்தின் இயக்குநர் ஃபாசியை, நாட்டின் பேரழிவு என அழைத்தார். உலகின் வேறு எந்த தலைவரும் டிரம்பை போல கொரோனா வைரஸ் தொற்றை அலட்சியமாக கையளவில்லை என்பதே பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்தாக உள்ளது.

First published:

Tags: Donald Trump, US Election 2020