Oxygen | டெல்லிக்கு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவு

மாதிரிப்படம்

டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    டெல்லிக்கு தினசரி 500 மெட்ரிக் டன் ஆக்சிஜம் போதுமானது என்று மத்திய அரசு வாதாட அது பயனற்று போனது, டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அடுத்த உத்தரவுகள் வரும் வரை தினமும் 700 மெட்ரிக் டன்கள் மெடிக்கல் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டாக வேண்டும் என்று கறார் உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

    “நாங்கள் 700 மெட்ரிக் டன்கள் தினமும் சப்ளை செய்யப்பட வேண்டும் என்றால் இந்த அளவில் டெல்லிக்கு சப்ளை செய்யப்பட்டாக வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களை பலவந்தமாக எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு செய்து விடாதீர்கள். மீண்டும் தெளிவு படுத்துகிறோம் டெல்லிக்கு நாளொன்றுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை கட்டாயம்” என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறிவிட்டது.

    தொடர்ந்து 3வது நாளாக இந்தியாவின் ஆக்சிஜன் நெருக்கடி நீதிமன்றத்தில் விவாதப்பொருளாகியுள்ளது. மேலும் ஆக்சிஜன் இருப்பு, சப்ளை ஆகியவற்றைக் கண்காணிக்க நிபுணர்கள் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான ஆக்சிஜன் எவ்வளவு என்பது தெரியவரும்.

    “மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனில் மத்திய அரசு வெளிப்படையாக ஆக்சிஜன் ஒதுக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து சொல்லட்டும்.

    டெல்லிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட வேண்டிய ஆக்சிஜனில் பாதிதான் கிடைக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் தெரிவித்தார், ஆனால் மாலையில் ஆக்சிஜன் சப்ளைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    கடந்த 2 வாரங்களாக டெல்லியில் பல மருத்துவமனைகள் சமூக ஊடகங்களில் ஆக்சிஜன் தேவை பற்றி பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன.

    கடந்த வாரம் டெல்லியின் பத்ரா மருத்துவமனையில் ஒரு மருத்துவர் உட்பட 12 பேர் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைந்தனர். இதற்கு ஒருவாரம் முன்னதாக டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் 25 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். கர்நாடகாவிலும் உத்தரப்பிரதேசத்திலும் இதே கதிதான்.
    Published by:Muthukumar
    First published: