FACT CHECK: கற்பூரம், ஓமம் ஆகியவற்றை நுகர்வதால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா? மருத்துவர்களின் பதில்

கொரோனா சிகிச்சைக்கான பல மருந்துகளும், ஆலோசனைகளும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன.

  • Share this:
கற்பூரம், கிராம்பு, ஓமம் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றின் நீராவியை உள்ளிழுப்பது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் என்று ஒரு வைரல் செய்தி சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இது சுவாசக் கோளாறையும் போக்கும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக வேலை செய்கிறதா? என்பதில் பலரையும் குழப்பமடைய வைக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல் இந்திய மக்கள் பலரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டிலேயே இயற்கையாக தயார் செய்த பல நோய் எதிர்ப்பு சக்தி பானங்களை குடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் மற்றொரு இயற்கை வழியும் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், கற்பூரம், கிராம்பு, ஓமம், சில சொட்டுகள் யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு வெள்ளை காட்டன் துணியில் பொட்டலம் போல கட்டி வைத்து, நாள் முழுவதும் அதன் வாசனையை உள்ளிழுக்க வேண்டும். இது ஆக்ஸிஜன் அளவையும் கன்ஜெசனையும் அதிகரிக்க உதவுகிறது. ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும்போது லடாக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பொட்டலம் வழங்கப்படுவதாகவும். இது ஒரு வீட்டு வைத்தியம் என்றும் அந்த சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்தக் கூற்றுக்கு ஆதரவாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உண்மையில், மார்பு நிபுணர்கள் இந்த கூற்றை ஒரு கட்டுக்கதை என்றே அழைத்தனர். கற்பூரம், கிராம்பு மற்றும் ஓமம் ஆகியவை இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்கலாம் என்பதற்கும் அல்லது சுவாசக் கோளாறின் போது நிவாரணம் அளிக்க முடியும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று மற்ற சில அறிக்கையிலும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகள் அவை நாசி அடைப்புகளை நீக்கம் செய்வதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று கூறுகின்றன.

இருப்பினும், லேசான சுவாச நோய்த்தொற்றின் போது இது ஒரு நல்ல-உணர்வு சிகிச்சையாக செயல்படும் என்று கூறப்படுகிறது. பொதுவாக கற்பூரத்தை சருமத்தில் தேய்த்து வந்தால் அது வலி மற்றும் அரிப்புகளைக் குறைக்க உதவும். மறுபுறம் நாசி அடைப்பை நீக்குவது ஆக்ஸிஜன் செறிவூட்டலை மேம்படுத்தாது என்றும் ஒரு ஆய்வு தெரிவிகிறது. அதேபோல், கிராம்பு, ஓமம் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவை ஆக்ஸிஜன் அளவையும் கன்ஜெசனையும் அதிகரிக்கும் என்று எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், கொரோனா சிகிச்சைக்கான பல மருந்துகளும், ஆலோசனைகளும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாகிவிட்டன. இப்பொது சோசியல் மீடியாவை எடுத்துக்கொண்டால், வீட்டு வைத்தியம் முதல் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகள் வரை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகள் ஆடியோ மற்றும் வீடியோக்கள் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், அந்த வைத்தியங்கள் எதுவும் சான்றிதழ் பெற்றவையாகவோ அல்லது முறையாக சரிபார்க்கப்பட்டவையாகவோ இருக்காது.

இதுபற்றி பேசிய மருத்துவர் நரோட்டம் குமார் என்பவர், "நான் கொரோனா தொடர்பான பல சமையல் குறிப்புகளை சோசியல் மீடியாவில் உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். அவற்றில் ஒன்று வீட்டில் சுயதனிமையில் உள்ள நோயாளிகளுக்கான ஒரு வீட்டு வைத்தியம். அந்த பதிவு ஐந்து டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை தினசரி சாப்பிட பரிந்துரைக்கிறது. அதாவது வெதுவெதுப்பான நீரில் இந்த தூளை சேர்த்து குடிக்க வேண்டும் என மக்களை பரிந்துரைத்துள்ளது. இலவங்கப்பட்டை உண்மையில் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் கார்பன் டை ஆக்சைட்டின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் இரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

இது உடல் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் கோடையில் அதற்கு எதிர்வினையாற்றவும் உதவும்" என்று மேற்கோளிட்டுள்ளார். இது கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றால் சந்தேகம் தான் என்று கூறியுள்ளார். அதேபோல ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை ‘காஷாயம்’ (மசாலாப் பொருட்களின் கலவை) குடிக்க பரிந்துரைக்கும் ஆலோசனைகளும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஈ.என்.டி நிபுணர் டாக்டர் ஆர் கே கன்னா கூறுகையில், "கற்பூரம், ஓமம் பொட்டலங்களை வாசனை செய்வதால் அவை உடலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் மக்கள் சிலர் இந்த பொட்டலங்களை தங்கள் முகக்கவசங்களில் வைத்து சுவாசிக்க தொடங்கியுள்ளனர். இது மற்ற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, உங்கள் உடல்நிலை குறித்து குடும்ப மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்காமல் வாட்ஸ்அப் மருந்துகளைப் பின்பற்ற வேண்டாம் என்று மருத்துவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Published by:Vijay R
First published: