மற்ற நோய்களின் தாக்கம் அதிகரிப்பே கொரோனா உயிரிழப்பு உயர காரணமா? மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா பயத்தின் காரணமாக மற்ற நோய்களுக்காக சிகிச்சையை தொடராமல் இருப்பது தான் கொரோனா உயிரிழப்பிற்கு காரணம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மற்ற நோய்களின் தாக்கம் அதிகரிப்பே கொரோனா உயிரிழப்பு உயர காரணமா? மருத்துவர்கள் விளக்கம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 28, 2020, 3:15 PM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இதயவியல், நரம்பியல், மகப்பேறு, சிறுநீரகவியல் என பல உடல் உபாதைகளுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்வோர் தற்போது மருத்துவமனை வர அச்சப்பட்டுக்கொண்டு முறையாக சோதனை செய்துக்கொள்ளாமல் மற்ற நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

இப்படி மற்ற நோய்களுக்கு முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கின்றனர்.

Also read... இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவிற்கு தடுப்பூசி - டிரம்ப் திட்டவட்டம்


ரத்த கொதிப்பு, இதயம், சிறுநீரகம் தொடர்பாக மருந்துகளை எடுத்துக்கொள்வோர் கண்டிப்பாக மருத்துவரை அனுகி உடல்நிலையை கண்காணித்து அளவீடுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் மருத்துவர்கள், மற்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும் போது கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர்.

மேலும் தேவையில்லாமல் அச்சம் கொண்டு வீடுகளில் தனிமையில் இருப்போர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத்துறையின் 104 என்ற இலவச அழைப்பேசிக்கு, அழைத்து ஆலோசனை பெறலாம் என்று சொல்லும் மருத்துவர்கள் பிற நோய்களுக்கான மருத்துவத்தையும் தொடர்வது மூலம் கொரோனாவின் வீரியத்தில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading