கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கும் மருத்துவர்கள்..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

உடனடி சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு முழுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்கும் மருத்துவர்கள்..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
கர்ப்பிணிகள்
  • Share this:
எழும்பூர் தாய் சேய் நலம் மருத்துவமனையில் கொரோனோவை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பு விரிவாக விவரிக்கிறது. 

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தினமும் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர். 100-க்கும் அதிகமான கர்ப்பிணிகள் தங்கள் எதிர்காலத்தை சுமந்துகொண்டு இங்கே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது கொரோனோ அச்சுறுத்தலில் இருந்து கர்ப்பிணிப்பெண்களை பாதுகாப்பது மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் அடுத்த இரண்டு மாதங்களில் குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் உள்ள கர்ப்பிணிகள் பட்டியல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து செவிலியர்கள் கண்காணித்து வருவதாக எழும்பூர் தாய் சேய் மருத்துவமனை இயக்குநர் விஜயா கூறுகிறார்.


இதுவரை, கொரோனோவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் யாரும் இல்லை எனவும், கொரோனோ வைரஸ் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு என தனி சிகிச்சை அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் என நம்பிக்கையளிக்கிறார்.

சுமார் எட்டு நாட்களுக்கு முன்பிலிருந்தே இங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கொரோனோ பயம் இல்லாமல் பாதுகாப்பாக உணர்வதாகவும் மகிழ்ச்சியடைகிறார் நிறைமாத கர்ப்பிணி ஒருவர்.

கர்ப்பிணிகளுக்கு உதவிக்காக வருபவர்கள் அதிகமாக கூடுவதால் மருத்துவர்களுக்கு கூடுதல் சுமை இருப்பதாக வேதனை தெரிவிக்கிறனர். பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கர்ப்பிணி பெண்கள் இல்லத்திற்கு சென்று அவர்களை அழைத்து வரவும், சிகிச்சை அளித்த பிறகு அவர்களை கொண்டு இல்லத்தில் விடுவதற்கும் தனி வாகனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.144 தடை உத்தரவுக்கு மத்தியிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.

Also see...


 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்