ஊரடங்கு உனக்குத் தெரியாதா...? பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார்

ஊரடங்கு உனக்குத் தெரியாதா...? பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார்
  • News18
  • Last Updated: March 25, 2020, 11:21 AM IST
  • Share this:
பணி முடித்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த பெண் டாக்டரை மிரட்டி போலீஸ் அதிகாரி காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹீமா பிந்து என்ற பெண் மருத்துவர் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை, சாலையில் பணியில் இருந்த கம்மம் போலீஸ் துணை ஆணையர் கணேஷ் தடுத்து நிறுத்தினார்.


”நான் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர். அவசர சிகிச்சை இருந்ததால் சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்” என்று ஹீமா பிந்து கூறியுள்ளார்.

ஆனால், அந்த போலீஸ் அதிகாரி மருத்துவருக்கே கொரோனா பற்றிய விழிப்புணர்வு வகுப்பு எடுத்ததுடன், ”வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவித்திருப்பது, உனக்கு தெரியாதா?” என்று ஒருமையில் பேசியுள்ளார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் மருத்துவரை, கம்பம் நகரில் உள்ள இரண்டாவது நகர காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் கணேஷ் உத்தரவின் பேரில் போலீசார் பலவந்தமாக இழுத்துச் சென்றனர்.பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹீமா பிந்து, துணை ஆணையர் மீது அதே காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தில், போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்டு டாக்டர் ஹீமா பிந்து மகொடுத்த புகாரை திரும்பப் பெற செய்தனர்.

போலீஸ் அதிகாரிகள் வற்புறுத்தல் காரணமாக அவர் காவல்துறை அதிகாரி மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றார். இது குறித்து பேட்டியளித்த ஹீமா பிந்து, “நாடு கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வருகிறது. இந்த நேரத்தில் இந்த பிரச்சனையை இதற்கு மேல் பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்