என்னை விட்டுவிடுங்கள்... கதறி அழும் சீன மருத்துவர்!

என்னை விட்டுவிடுங்கள்... கதறி அழும் சீன மருத்துவர்!
சீன பெண் மருத்துவர்
  • News18
  • Last Updated: January 31, 2020, 4:04 PM IST
  • Share this:
சீன பெண் மருத்துவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் சீன மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 21 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள சீன மக்களுக்கு மருத்துவம் பார்க்க சீனாவில் மருத்துவமனையில் இடம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.


மருத்துவர்களும் இரவு பகலாக தூக்கம் இன்றி நோயாளிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் சீன மருத்துவர் ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனது கைகளில் டிஷு வைத்துக்கொண்டு தன்னால் இனி முடியாது. இங்கு போதுமான வசதிகள் இல்லை என்றபடியும் அவர் அழுது கொண்டு கூறுகின்றார். சக மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். இதனை ஆங்கில இணையதள செய்திகள் வெளியிட்டுள்ளன.

 
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading