• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தொற்றில் புதிய அறிகுறிகள் - பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா தொற்றில் புதிய அறிகுறிகள் - பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா விதிமுறைகள் மீறினால் அபராதம்

கொரோனா விதிமுறைகள் மீறினால் அபராதம்

வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டாலும் தனிமனித இடைவெளி மற்றும் முககவசம் போன்றவைதான் தற்போதைய தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள்

  • Share this:
    கொரோனா வைரஸின் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், புதிதாக குறிப்பிடப்பட்டுள்ள சில அறிகுறிகள் இருப்பவர்களும் உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    கொரோனா தொற்று உலகத்தையே ஊரடங்கு செய்துள்ள நிலையில் வைரஸின் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லும் மருத்துவர்கள் கொரோனா தொற்றின் முதற்கட்ட பரவலின் போது இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு போன்றவை அறிகுறிகளாக பார்க்கப்பட்டன.

    இந்நிலையில் தற்போது வாசனை இன்மை, நாவில் சுவை தன்மை தெரியாமல் போவதும் புதிய அறிகுறிகளாக கண்டறிய பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறுகிறார் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சித்ரா

    அனைத்து தரப்பு மனிதர்களின் உடலில் புகுந்த உடன் நுரையீரலை தான் கொரோனா வைரஸ் முதலில் தாக்கி பலவீனம் செய்யும் என்பதால் நுரையீரலை பாதுகாப்பானதகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    Also read... கொரோனா களத்தில் போராடும் காவல்துறை - 1500 போலீசாருக்கு தொற்று பாதிப்பு

    கொரோனா தொற்று உலகம் முழுவமும் பரவ தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையிலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தகுந்த பாதுகாப்பு முறைகள் தான் நம்மை காத்துவருவதாக சொல்லும் மருத்துவர்கள் வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டாலும் தனிமனித இடைவெளி மற்றும் முககவசம் போன்றவைதான் தற்போதைய தீர்வு என்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: