• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகக்கூடாது: இந்திய மருத்துவ சங்கத்துக்கு டாக்டர் ரவீந்திரநாத் கண்டனம்!

தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகக்கூடாது: இந்திய மருத்துவ சங்கத்துக்கு டாக்டர் ரவீந்திரநாத் கண்டனம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனாவை பயன்படுத்தி நாடு முழுவதுமே பல  தனியார் மருத்துவமனைகள்  கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. கட்டணக் கொள்ளை நடைபெறுவதை பல  நீதிமன்றங்களும், பல ஊடகங்களும்  அம்பலப் படுத்தியுள்ளன என டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்

  • Share this:
    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு இந்திய மருத்துவ சங்கம் துணை போகக்கூடாது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்

    திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன்  கடந்த 19 ம் தேதி தனது முகநூலில் தனியார் மருத்துவமனைகளை பணந்திண்ணி கழுகுகள் என விமர்சித்து இருந்தார். இந்த விமர்சனத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்து இருந்ததுடன், இதற்கு மக்களவை உறுப்பினர் சுப்பாராயன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அறிக்கை விடுத்து இருந்தது.

    இந்நிலையில் இந்திய மருத்துவ மருத்துவ சங்கத்தின் அறிக்கைக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தை கண்டித்து நீண்ட  அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும்,தமிழ்நாடு  மாநில துணைச் செயலாளரும், ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ,திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான  கே.சுப்பராயன்ஒரு  சமூகப் பொறுப்பு மிக்க  மூத்த அரசியல் தலைவர் என்ற முறையிலும், மக்கள் பிரதிநிதி என்ற முறையிலும் , மக்கள் நலன் சார்ந்து  " பணம் தின்னிக் கழுகுகளான தனியார் மருத்துவமனைகளை, தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவந்தால் தான், நோய்த் தொற்றின் தீவிர சவாலை வெற்றிகரமாக முறியடித்து, மக்களை காப்பாற்ற முடியும்என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவை கண்டித்தும்திரு.கே சுப்பராயன் இந்த பதிவை  திரும்பப்  பெற வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் , இந்திய மருத்துவச் சங்கம்  தெரிவித்துள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ள ரவீந்தரநாத்சுப்பராயன் கருத்தில் என்ன தவறு உள்ளது என்றும் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை ,அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தேசவிரோத குற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெரும் தொற்று பரவும்  காலத்தில், தொற்றின் தீவிர சவாலைக் கட்டுக்குள் கொண்டு வர  இது போன்ற ஆலோசனை கூறியது பெருங்  குற்றமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கொரோனாவை பயன்படுத்தி நாடு முழுவதுமே பல  தனியார் மருத்துவமனைகள்  கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. கட்டணக் கொள்ளை நடைபெறுவதை பல  நீதிமன்றங்களும், பல ஊடகங்களும்  அம்பலப் படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.

    நீதி மன்றங்களின் தலையீட்டின்  காரணமாக பல மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயமும்  ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளை தங்களது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக சுட்டிக் காட்டியுள்ள அவர்,  கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றவரிடம், மூன்று நாட்களுக்கு ரூ 6 லட்சம் வசூலித்ததாக ஒரு சென்னை மருத்துவமனை பற்றி ` செய்தி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மருத்துவச் செலவுக்காக அதிகம் செலவு செய்ததின் காரணமாக நாடு முழுவதும் பல குடும்பங்கள் சொத்துக்களையும்,நகைகளையும்  விற்றுவிட்டனகொரோனா சிகிச்சையின் காரணமாகவே ஆயிரக்கணக்கானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடைபெறவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: