உத்தரப் பிரதேசத்தில் மருத்துவரின் கன்னத்தில் பளார் விட்ட செவிலியர்

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவரின் கன்னத்தில் பளார் விட்ட செவிலியர்

உ.பி. மருத்துவமனை தகராறு

உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையிலேயே செவிலியர் மற்றும் மருத்துவர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இந்தப்போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் சகப்பணியாளர்களையும், குடும்பத்தினரையும் கூட இவர்கள் இழந்துள்ளனர். கண் எதிரே நிறைய மரணங்களையும்  சந்தித்துள்ளனர். உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் ருத்ரதாண்டவம் ஆட தொடங்கியுள்ளது.  முன்களப்பணியாளர்கள் மீண்டும் எந்த எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தங்களது கடமையை செய்யத்தொடங்கிவிட்டனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையிலேயே செவிலியர் மற்றும் மருத்துவர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூரில் உள்ள மருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் கொடுக்கும் விவகாரத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செவிலியர், அங்கிருந்த காவலரின் முன்னிலையிலேயே மருத்துவரை அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவரும், உடனடியாக செவிலியரை தாக்க தொடங்கியுள்ளார். இதனை காவலர் அமைதியாக வேடிக்கை பார்க்க, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களை விலக்கி விட்டனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறந்தவரின் உறவினர்கள் இறப்பு சான்றிதழை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் இறப்பு சான்றிதழ் தொடர்பாக மருத்துவரை அனுகியுள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாக கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டார். இறந்தவரின் உறவினர்கள் மீண்டும் மீண்டும் செவிலியரை அணுகியதால் அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவரை நேரில் சந்தித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    #WATCH | A doctor and a nurse entered into a brawl at Rampur District Hospital yesterday.



    இருவரும் வாக்குவாதம் செய்ய நோயாளிகள், பார்வையாளர்கள், காவலர்கள் என கூட்டம் கூடிவிட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற மருத்துவர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதன்காரணமாக ஆத்திரமடைந்த செவிலியர், அங்கிருந்த காவலரின் முன்னிலையிலேயே மருத்துவரை அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவரும், உடனடியாக செவிலியரை தாக்க தொடங்கியுள்ளார். இதனை காவலர் அமைதியாக வேடிக்கை பார்க்க, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களை விலக்கி விட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ராம்ஜி மிஸ்ரா, நான் இருவரிடமும் பேசினேன். இருவரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பணிச்சுமை அதிகமாக இருந்ததாகவும் கூறினர்” என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: