சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று உடல் வெப்பப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மாநகராட்சி பணியாளர்கள் 150 பேருக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமுடைந்தவர்களின் எண்ணிக்கை நம்பிக்கை தருவதாக உள்ளது. 527 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
1359 பேர் திருவிக நகரில் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். திரு.வி.க நகர் மண்டலத்தில் உள்ள 2300 தெருக்களில் 600 தெருக்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய முழு ஊரடங்கில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர் என்றார்.
Also see:
மேலும் கூறுகையில், மத்திய அரசிடம் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 1390 கோடி நிதியில் 500 கோடி முன்கூட்டியே வந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவக் கருவிகள் வாங்க 6000 கோடி வரை பிரதமரிடம் முதல்வர் கேட்டுள்ளார். அது வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இணையப் புரட்சியை ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டம் நிறைவேறுவதைத் தடுக்க நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் திமுக மூக்கறுபட்டு உண்மை முகம் உலகிற்குத் தெரிந்துள்ளதாகவும் அவர் சாடினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.