குரோம்பேட்டை மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படும் - டி.ஆர்.பாலு எம்.பி.

டி.ஆர்.பாலு

ஒரு வார காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆக்சிஜன் படுக்கைகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் திறக்கப்படும் என ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தினந்தோரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.

  அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகரிக்கும் வகையில் தனியார் கல்லூரிகள், மருத்துவமனை வளாகங்கள் ஆகியவை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி வருகின்றனர்.

  அத்துடன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ முறையும் கையாளப்பட்டு, சித்தா மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்திடும் வகையில் பல்வேறு இடங்களில் சித்த மருத்துவமனை திறக்கப்பட்டது.

  அதன்படி, சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் 150 படுக்கைகளுடன் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது, அந்த சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

  அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, “செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 1,404 இருக்கிறன. இதில் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் 824 உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 3,662 படுக்கைகள் உள்ளன. அதன்படி, மொத்தம் 5,066 படுக்கைகள் இருப்பதாகவும் 3,302 ஆக்சிஜன் படுக்கைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது” என்று கூறினார்.

  மேலும், “மாவட்ட ஆட்சியரும் தனியார் துறையினரும் கொரோனா தடுப்பு பணியை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறார்கள். திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அயராது உழைத்து வருகிறார்கள். ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதற்காக அமைச்சர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். இந்த ஆட்சி மீது பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

  Must Read :  கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு அதை வென்று காட்டும்: அமைச்சர் நாசர் உறுதி

   

  குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முயற்சியால் ஒரு வார காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆக்சிஜன் படுக்கைகள் திறக்கப்படும்” என்றும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: