நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? என திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளதாக
மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார நலத்துறை அறிவித்துள்ளது.
டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் புதிதாக மேலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநிலங்கள் முடுக்கி விட்டுள்ளன.
வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், கர்நாடகா, கேரளா, டெல்லி, கோவா, உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், உத்தரகாண்ட், பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பள்ளிகள் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடைய திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.